பண்பாட்டு தீபாவளி நிகழ்ச்சி
நவம்பர் 5ஆம் தேதி Ampang Spectrum Mall பக்கத்தில் இருக்கும் கார் நிருத்தும் இடத்தில் மிகச் சிறப்பாக கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட ரசிகர்களின் முன்னிலையில் பண்பாட்டு தீபாவளி நிகழ்ச்சி மதியம் 12 தொடங்கி இரவு 9.30 வரை பலவித போட்டிகளோடும் கலை கலாச்சார உரை மற்றும் நிகழ்ச்சியோடும் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பேர் ஆதரவு வழங்கியது மலேசிய சுற்றுலா கலை பண்பாட்டு அமைச்சு இதனை சிறப்பாக ஏற்பாடு செய்தது கிளிக் ட்ரீம்ஸ் நெட்வொர்க் நிறுவனம். வந்திருந்த பொதுமக்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது அதோடு போட்டியில் வெற்றி பெற்றவருக்கு ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டது . சந்தோஷமான சூழ்நிலையில் அனைவரும் மகிழ்ச்சியோடு இல்லம் திரும்பினார்கள்.
பண்பாட்டு தீபாவளி நிகழ்ச்சி
MyFame Highlights
நமது நாட்டில் சமீப காலமாக பல உள்ளூர் திரைப்படங்கள் வெளியீடு கண்டு வருகிறது. பல இளம் இயக்குநர்களும் கலைஞர்களும் உள்ளூர் கலைத்துறையில் பெயர் பதித்து வருகின்றனர். அவ்வரிசையில் மார்ச்14-ஆம் திகதி, நமது உள்ளூர் படைப்பான தனுஷ் திரைப்படம் வெளியீடு காண்கிறது. இப்படத்தை Love In 12 Hours எனும் குறும்படம் இயக்கிய இயக்குநர் மதன் அவர்களின் இயக்கத்தில் உருவான திரைப்படமாகும். இவர் ஏற்கனவே தமனி மற்றும் கஜன் போன்ற வெற்றி திரைப்படங்களை தந்து பல்லாயிரம் ரசிகர்களின் வரவேற்பு பெற்ற ஒரு முக்கிய இயக்குநர் ஆவார்.
தனுஷ் திரைப்படம் நாடு முழுவதுமுள்ள சுமார் 30 திரையரங்குகளில் திரையீடு காணவிருக்கிறது. இத்திரைப்படம் நவீன சமூகத்தின் பிரச்சினையை முன்னிருத்தி ஓர் நல்ல கருத்தை விதைக்கிறது. தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களால் இன்றைய சமுதாயம் எப்படி பாதிக்கப்படுகிறது, என்ன துன்பத்திற்கெல்லாம் ஆளாகுகிறாரர்கள், இதிலிருந்து எப்படி தப்பிப்பது மற்றும் நாம் இந்த நவீன உலகில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமென இப்படம் சிறப்பாக எடுத்துரைக்கிறது. இக்கருத்தை வெறுமனே சொல்லாமால், பார்ப்பவர்களுக்கு சலிப்பு தட்டாமல் இருக்க இத்திரைக்கதையை கொஞ்சம் காதல், கலாட்டா, சஸ்பென்ஸ், மர்மம் என விறுவிறுப்பாக அமைத்திருக்கின்றனர்.
இதில் நடித்த கலைஞர்கள் எதார்த்தமான நடிப்பில் மிக சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தில் வரும் 3 முத்தான பாடல்களும் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கிறது. நமது உள்ளூர் இளைஞர்களின் உழைப்பில் மிக அற்புதமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை திரையரங்கில் கண்டு மகிழுங்கள். உள்ளூர் திரைப்படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து நமது கலைஞர்களை வெற்றியடைச் செய்வோம். உடனே உங்கள் அருகில் உள்ள திரையரங்கில் ‘தனுஷ்' திரைப்படத்தை கண்டு மகிழுங்கள்.
